search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெழுகு சிலை"

    • சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையை தயாரித்து அந்த சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார்.
    • மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்த சிலையை பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சந்திரசேகர்-சுமா ஆகியோருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமா இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையை தயாரித்து அந்த சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அதன்படி அவரது மனைவி சுமாவின் மெழுகு சிலை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் தனது வெள்ளி விழா திருமண ஆண்டை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தார். இதற்காக உறவினர்களை அழைத்தார்.

    விழாவில் இறந்த மனைவி சுமாவின் மெழுகு சிலையை வைத்திருந்தார். மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்த இந்த சிலையை பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இறந்த சுமாவே நேரில் வந்து விட்டதாக கருதினர். பின்னர் தான் அது மெழுகு சிலை என்று தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

    மேலும் சந்திரசேகர் தனது மனைவியின் மெழுகு சிலை அருகே நின்று கொண்டார். அவர்களுக்கு அருகில் 2 மகள்களும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். இறந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை கணவர் கொண்டாடிய சம்பவம் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • அச்சு அசலாக தந்தையை போலவே இருக்கும் வகையில் சிலையை அமைத்தார்.
    • பன்னீர்செல்வம் சிலையின் முன்பாக காலில் விழுந்து மணமக்கள் ஆசிபெற்றனர்.

    சேலம்:

    சேலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய இயேசு ராஜா. சிவில் என்ஜினீயர். இவரது தந்தை பன்னீர்செல்வம். இவர் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தார். அவர் உயிருடன் இருக்கும்போது தனது மகன் ஆரோக்கிய இயேசுராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். அவரது மறைவால் துக்கத்தில் ஆழ்ந்த ஆரோக்கிய இயேசுராஜா தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற எண்ணினார்.

    இதையடுத்து தந்தைக்கு ரூ.5 லட்சம் செலவில் மெழுகுசிலை உருவாக்கினார். அச்சு அசலாக தந்தையை போலவே இருக்கும் வகையில் அந்த சிலையை அமைத்தார். அந்த சிலையை தனது வீட்டில் வைத்து வணங்கினார்.

    இந்த நிலையில், ஆரோக்கிய இயேசு ராஜாவுக்கும் - ஜூலியட் லதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. மண்டபத்தில் இருக்கையில் தந்தையின் சிலையை அமர வைத்து திருமண ஜோடிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது.

    அப்போது பன்னீர்செல்வம் சிலையின் முன்பாக காலில் விழுந்து மணமக்கள் ஆசிபெற்றனர். அதேபோல் உறவினர்களும் அந்த மெழுகு சிலை பார்த்து கண் கலங்கினர். பின்னர் அனைவரும் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வு திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ×